DTP/DTCP: அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரன்முறைப் படுத்துவதற்கான வாய்ப்பை தமிழக அரசு மீண்டும் வழங்கியுள்ளது. இதனிடையே DTP/DTCP அப்ரூவல் பெறுவது என்றால் என்ன? எப்படி பெறுவது? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளுக்கு DTP/DTCP அப்ரூவல் பெற்ற மனைகளாக வரன்முறைப்படுத்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழக அரசு அவகாசம் கொடுத்தது.
இந்த வாய்ப்பை தவறவிட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் மனை வைத்திருக்கும் மக்கள், தங்கள் மனை இருக்கும் பகுதி மாநகராட்சி எல்லைக்குள் வந்துவிட்டால், பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி அப்ரூவல் பெற வேண்டும் என்று புலம்பித் தவித்தனர்.
Advertisement

இதனிடையே தற்போது DTP/DTCP அப்ரூவல் வாங்குவதற்கான வாய்ப்பை தமிழக அரசு மீண்டும் கொடுத்துள்ளது.
இதனிடையே, அங்கீகாரம் பெறாத வீட்டுமனை என்றால் என்ன? இதற்கு எப்படி அங்கீகாரம் பெறுவது? கட்டணம் என்ன? என்பது குறித்து கோவை மாநகராட்சியில் பதிவுபெற்ற கட்டுமானப் பொறியாளர் ந.கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

வீட்டுமனை அங்கீகாரம் என்பது என்ன?
நம்மிடம் உள்ள நிலத்தில் நாம் இஷ்டப்படி அனைத்து கட்டுமானங்களையும் செய்துவிட முடியாது. ஒரு நிலம் எந்த வகை பயன்பாட்டிற்கு உரியது என்பதை அரசு வகைப்படுத்தியுள்ளதைப் பொறுத்தே அங்கு கட்டுமானம் செய்ய முடியும்.
ஒரு நிலம், விவசாயம் செய்ய, வீடு கட்ட, தொழிற்சாலை அமைக்க, மருத்துவ மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைக்க என்று பல்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
Advertisement

குறிப்பிட்ட வகைப்பாட்டில் ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒருவர் அந்த பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதனை அரசின் DTP, DTCP என்ற அமைப்புகள் முறைப்படுத்துகின்றன. 5 ஏக்கருக்குள் உள்ள நிலத்தை வீட்டுமனையாக மாற்ற மாவட்ட அளவிலேயே DTP துறையில் அங்கீகாரம் பெறலாம். 5 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை மாநில அளவில் உள்ள DTCP துறையில் அனுமதி பெற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்டாத வீட்டுமைனை வைத்திருப்போர் தங்கள் நிலத்ததை வரன்முறைப்படுத்திக் கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. DTP/DTCP துறைகளை தவிர்த்து, மற்ற துறையிடம் பெறப்பட்ட எந்தவொரு அங்கீகாரமும் செல்லுபடியாகாது.
DTP/DTCP அப்ரூவல் வாங்குவது எப்படி?
தமிழக அரசின் பிரத்யேக இணையதளமான onlineppa.tn.gov.in என்ற தளம் மூலம் நமது விண்ணப்பத்தை ரூ.500 கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான ரசீதும் ஆன்லைனிலேயே வழங்கப்படும்.

பின்னர், அந்த ரசீதுடன், நிலம் தொடர்பான ஆவணங்களை, நமது நிலம் எந்த உள்ளாட்சி அமைப்பின் கீழ் வருகிறதோ அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரிகள் அதனை சரிபார்த்து நிலத்திற்கான அப்ரூவலை 15 வேலை நாட்களுக்குள் வழங்குவர்
கட்டணம் என்ன?
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நிலங்களை வரன்முறைப்படுத்த இணையதளத்தில் பொதுவாக தொகையாக ரூ.500 கட்டி பதிவு செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிற்கு ஏற்ப Development Charges மற்றும் Regularization Charges மாறுபடும்.
அப்ரூவல் பெறாவிட்டால்?
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு உங்களிடம் இருந்தால், நீங்கள் அங்கு வீடு கட்டும் போது, அதற்கான பில்டிங் அப்ரூவல் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பால் வழங்கப்படமாட்டாது.

பில்டிங் அப்ரூவல் இல்லை என்றால் வங்கிக்கடன் கிடைக்காது. மேலும், ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது அதற்கான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
DTP/DTCP அப்ரூவல் பெற மீண்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே இந்த அனுமதியை பெற முடியும். அதனால், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை வைத்திருப்போர் உடனே அப்ரூவல் வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அழைக்கலாம்: 9655165519
Useful information