விஜய் எப்படி இதை செய்வார்?- கோவையில் வானதி சீனிவாசன் முன்வைத்த கேள்வி

கோவை: விஜய் தனியாக எப்படி திமுகவை எதிர்பார் என்றும் அவரிடம் என்ன திட்டம் உள்ளது என்றும் கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி மைதானத்தில் வந்தே மாதரம் முழு பாடல் இசைக்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ சிதம்பரனாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 வருடங்கள் ஆவதை ஒட்டி பாரத பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள அவரது செக்குக்கு முன்பு மாணவர்களுடன் அனுமதி கேட்ட பொழுது காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும் பின்னர் இந்த இடத்திற்கும் மாணவர்கள் வருவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததாக குறிப்பிட்ட அவர், திமுக அரசிடம் இது கட்சி நிகழ்ச்சி அல்ல, வந்தே மாதரம் பாடல் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு சொந்தமான பாடல்கள் அல்ல என்று முதல்வருக்கு தெரிவித்தார். நியாயமாக பார்த்தால் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கு பெற்ற முக்கியமான அரசியல் கட்சி எல்லாம் இதனை முன்னெடுத்து இருக்க வேண்டும் ஆனால் துரதிஷ்டவசமாக வந்தே மாத்திரம் என்ற சொல் குறிப்பாக தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சுதந்திர போராட்டத்தில் அதிகமான பங்களிப்பு வழங்கியது நம்முடைய தமிழகம், ஆனால் இந்த வந்தே மாதரம் பாடல் உடைய 150 வது ஆண்டு விழாவை மாநில அரசு கொண்டாட மறந்து விட்டன என்றார்.

ஸ்டாலின் என்ன முட்டுக்கட்டை போட்டாலும், தமிழகம் எப்பொழுதும் தேசிய மக்கள் தான் நிற்கப் போகிறது. ஒரு இடத்தில் வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு மறுத்து உள்ளீர்கள், எங்கள் கட்சியினர் நூற்றுக் கணக்கான இடங்களில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டு உள்ளதாகவும், தெருக்கள் வந்தே மாதரம் பாடுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், உங்களது அடக்கு முறைக்கு அஞ்சு விட மாட்டோம் என்றும் பிரிட்டிஷ்காரர்களை இந்த நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு ஒரே மந்திரமாக இருந்தது, இந்த வந்தே மாதரம் என்பது தான் என்றவர், இங்க வந்தே மாதரத்தின் வாயிலாக தான். நீங்கள் அதற்கு தடை செய்ய நினைத்தால் இந்த ஒற்றை வார்த்தையை உங்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு தேசபக்தர்கள் முடிவு செய்வார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிந்து கொள்வதாக தெரிவித்தார்.

எஸ்.ஐ.ஆர் ஒரு இடியாப்ப சிக்கல் போன்று இருக்கிறது. தி.மு.க கூட்டணி கட்சிகள் போராட்டம் குறித்தான கேள்விக்கு, எஸ்.ஐ.ஆர் தொடர்பாக, இதற்கு முன்பாகவே திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு நாடகத்தை நடத்துவதாகவும், திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு அவர்களுடைய திறமையின்மையை மறைப்பதற்கு அவர்களுடைய ஊழலை மறைப்பதற்கு ஏதாவது ஒன்று மத்திய அரசின் மீது திசை திருப்பதாகவும், எஸ் ஐ ஆர் என்பது ஏதோ புதிதாக நாட்டில் செய்யப்படுவது அல்ல, 2002 – 2005 தமிழகத்தில் கூட எஸ் ஐ ஆர் நடத்தப்பட்டது என்று கூறிய அவர் அப்பொழுது அதைப் பற்றி தி.மு.க வாயை திறக்கவில்லை, இப்பொழுது என்ன கவலை வந்து உள்ளது ? இப்பொழுது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளதாகவும், ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் மத்திய அரசு திட்டுவதின் வாயிலாக தங்களுடைய அரசியல் வாழ்க்கையை சரிந்து கொண்டு இருக்கின்ற அரசியல் வாழ்க்கையை நிமிர்த்தி விடலாம் என ஸ்டாலின் அவர்கள் கனவு காண்பதாகவும், எஸ் ஐ ஆர் என்பது பி.ஜே.பி செய்வது அல்ல, அரசியல் அமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தின் வாயிலாக தேர்தல் ஆணையம் இந்தப் பணியை செய்து கொண்டு உள்ளதாகவும், தெரிவித்தார்.

பீகாரில் லட்சக் கணக்கானவர்களை எடுத்து விட்டதாக கூறுவதாகவும், பீகாரில் முதல் கட்ட தேர்தல் முடிந்தும் ஒரு வாக்குச்சாவடியில் கூட தேர்தல் ஆணையம் எங்களை சட்ட விரோதமாக எங்கள் வாக்குரிமையை பறித்து விட்டது என்று ஒரு புகார் வரவில்லை என்றும் தெரிவித்தவர். பீகாரில் ஒழுங்காக வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாக கூறினார். இதை தயவு செய்து உங்களுடைய பீகார் அரசியல் கட்சி நண்பர்களோடு கேட்டு அறிந்து விட்டு அதற்கு பின்பு உங்கள் பொய் பிரச்சாரத்தை செய்யுங்கள் முதல்வர் அவர்களே என்று கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் நடக்கக் கூடிய எஸ் ஐ ஆர் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், ஏனென்றால் தேர்தல் அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளை தான் நம்பி இருக்க வேண்டும், மாநில அரசு அரசு அதிகாரிகள் வாயிலாக தான் இந்த எஸ் ஐ ஆர் செய்ய முடியும், ஆனால் இங்கு என்ன நடக்கிறது. எஸ் ஐ ஆர் எதிராக போராட்டம் செய்வதாக ஒரு பக்கம் நாடகம் நடத்திக் கொண்டு, ஆனால் எஸ் ஏ ஆர் செய்யக் கூடிய பூத் லெவல் அலுவலர்களை வைத்து மிரட்டுவதும் அவர்கள் வைத்து இருக்க விண்ணப்பங்களை வாங்கி இவர்கள் விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டினார்.

அனைத்து அரசியல் கட்சி பூத் ஏஜெண்டுகள் அவர்களுடன் செல்லலாம், அங்கு பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்து உள்ளதாகவும், இது தொடர்ச்சியாக இருக்கும் என்றால் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தேர்தல் ஆணையத்தை எங்கள் கட்சி மனுவாக அவர்களுக்கு கொடுக்கும் என்பதை தெரிவித்தார்.

ஒருபுறம் வாக்காளர் பட்டியல் என்பது தூய்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை தான் தேர்தல் ஆணையம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், நம்முடைய வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடக் கூடாது என்பதற்கு தான் தேர்தல் ஆணையத்தின் நோக்கம். எஸ் ஐ ஆர் திராவிட முன்னேற்ற கழகம் எவ்வளவு குளறுபடி செய்தால் கூட நாங்கள் அத்தனை குடி மக்களுக்கும் வைக்கின்ற வேண்டுகோள் உங்கள் இடத்திற்கு பூத் லெவல் அதிகாரி வருகிறார்களா ? உங்களுக்கு படிவங்கள் கொடுக்கிறார்களா ? உங்களுடைய படிவம் சரியாக ஏற்றப்படுகிறது ? என்பதை நாம் ஒருவரும் கண்காணிக்க வேண்டும் என்று நாம் விழிப்புணர் இருந்து நாம் வாக்குரிமையை காப்பாற்ற வேண்டும் அதற்கு தேர்தல் ஆணையத்தின் உதவியை ஆன்லைன் வாயிலாக கூட நாட முடியும், இதையும் நாம் புரிந்து கொண்டு எஸ் ஐ ஆர் முயற்சியில் அத்தனை பேரும் முகத்தழைப்பு கொடுத்து நேர்மையான, வெளிப்படையான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

புதிய கட்சிகள் தி.மு.க வை எதிர்க்கின்றனர் அவர்கள் வெறும் அட்டை மாதிரி தான், மெதுவா தட்டினாலே காணாமல் போய்விடுவார்கள் என துணை முதல்வர் உதயநிதி கூறியது குறித்தான கேள்விக்கு,

மெதுவாகத் தட்டுவது புதிய கட்சி அல்ல, எல்லா கட்சியையும் தட்டிப் பார்க்கலாமா என்று நினைக்கிறார்கள் அது தட்டுனா ? என்று சொன்னால் அது எந்த அளவிற்கு திரும்பி அடிக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது.

தேர்தல் காலத்தில் ஒன்றாக பயணிக்கிற சூழலில், அ.தி.மு.க வினர் செங்கோட்டையன் விவகாரம் பெரும் பிரச்சனையாக உள்ளது. உங்கள் கூட்டணியில் இருக்கின்ற அவர்களுடன் பா.ஜ.க எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை, அவங்க கட்சி விவகாரங்கள் தலையிட மாட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் செங்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க வினர் அழைத்து இணைந்து செயல்படுவதற்காக அறிவுறுத்தியதாக கூறிய கேள்விக்கு

அவர் கூறினார் என்றால் அவரை யார் அழைத்தார்கள் ? கட்சியில் அதிகாரப் பூர்வமாக அழைத்தார்களா ? அந்த விஷயத்தை அவர் தான் வெளிப்படையாக கூற வேண்டும். எங்களைப் பொறுத்த வரை அ.தி.மு.க கட்சியினுடைய விவகாரங்களை தலையிடுவதற்கு எந்த விதமான எண்ணமும் கிடையாது எங்களுக்கு, மத்தியில் கொடுக்கும் வழிகாட்டுதலும் அதுதான் என்றவர், அது அவர்களுடைய கட்சி, கூட்டணியில் இருக்கின்றார்கள் கூட்டணி என்பது பலமாக எடுத்துக் செல்ல வேண்டும் என்பது தான் எங்களுக்கு தகவல் என தெரிவித்தார்.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு நடிகர் விஜய் அவருடைய ஜனநாயகம் படம் சம்மதமான பாடல்கள் நிகழ்ச்சிகள் வெளியானது அவருடைய செயல்பாடு எப்படி உள்ளது ? அரசியல் கவனம் செலுத்துகிறாரா ? திரைப்படத்திற்கு கவனம் செலுத்துகிறாரா ? அது எல்லா மதம், மொழிகளை இணைக்கும் விதமாக பாடல்கள் இந்தி வரிகளுடன் பிரச்சார பாடல் போன்று வந்து உள்ளதாக எழுப்பிய கேள்விக்கு

சினிமா பாடலை அரசியலில் பயன்படுத்துவது தமிழ்நாட்டில் புதிதல்ல, இங்கு இருக்கக் கூடிய அரசியலும் சினிமாவும் நெடுங்காலமாக ஒன்றாக பயணித்து இருக்கக் கூடிய சூழலில் ஒரு சினிமா நடிகர் அரசியல் கட்சியை ஆரம்பித்து இருக்கும் போது எப்படியாவது ? தன்னுடைய அரசியல் கட்சிக்கு பயன்படுத்துவதற்கு நினைப்பார்கள். அது ஒன்னு புதிதான ஆச்சரியமான, விஷயங்களாக பார்க்கவில்லை என்றும், ஆனால் நடிகர் விஜய் அவர்கள் தி.மு.க – வை வீழ்த்தப் போவதாக பேசுகிறவர், எப்படி தனியாக வீழ்த்த முடியும் ? அதற்கான பலம் இருக்கிறதா ? இல்ல ஏதேனும் திட்டம் இருக்கிறதா ? என்று தெரியவில்லை ஏனென்றால் தி.மு.க மாற்றப்படும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் ஒன்றா சேரி, ஒன்றா சேரி என்றும் எல்லா பாஷைகளையும் சொல்லுவதாக கூறுகிறீர்கள். அவர் யாருடன் சேரப் போகிறார் ? என்றும் கேள்வி எழுப்பினார்.

Recent News

திமுக அரசு அடிக்கல் நாடகம் மட்டுமே ஆடுகிறது- கோவையில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

கோவை: திமுக அரசு அடிக்கல் நாட்டி நாடகம் மட்டும் ஆடுவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...

Video

எதுக்கு டார்ச் அடிச்ச…? கோவையில் விவசாயியை எச்சரித்த காட்டு யானை…!

கோவை: கோவை தடாகம் பகுதியில் டார்ச் அடித்து பார்த்தவரை நோக்கி வேகமாக வந்த காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், தாளியூர்...
Join WhatsApp