அப்பாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசை- கோவையில் சண்முக பாண்டியன் பேட்டி…

கோவை: அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சண்முக பாண்டியன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கொம்பு சீவி திரைப்படத்தை சண்முக பாண்டியன் உட்பட படக்குழுவினர் ரசிகர்களுடன் பார்த்து குழுவினர் பார்த்து ரசித்தனர்.

கோவை சாந்தி திரையரங்கில் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள கொம்பு சீவி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இதனை ரசிகர்களுடன் படத்தின் இயக்குனர் பொன்ராம் நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் படக் குழுவினர் பார்த்தனர். முன்னதாக தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக ஜமாப் அடித்தும், பட்டாசு வெடித்தும்,ஆராத்தி எடுத்தும் வரவேற்றனர். முன்னதாக ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் இசைக்கு ஏற்றவாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து திரையரங்கில் திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர் குடும்பத்தின் பெண் குழந்தைக்கு விஜயலதா என பெயர் சூட்டினார். முன்னதாக திரையரங்கிற்கு வந்த சண்முக பாண்டியனை வரவேற்க காந்திபுரம் தேமுதிக நிர்வாகிகளுக்கும் கவுண்டம்பாளையம் தேமுதிக நிர்வாகிகளுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சண்முக பாண்டியன் கோவையின் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அப்பா விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை படுகிறேன் என்றும் அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை ஈசியாக எடுக்க முடியாது சரியான இயக்குநர் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் கூறினார்.

அரசியலில் தற்போது நாட்டம் இல்லை என்றும் சினிமாவில் தான் கவனம் செலுத்துவேன் எனவும் கூறினார். அப்பாவுடன் சரத் சார் நடித்துள்ளார் அவருடன் நடித்தது எனக்கு நல்ல அனுபவம் கிடைத்ததாகவும் கூறினார்.

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp