கோவை IFFCO வந்த தலைவர்; விவசாயிகளின் சவால்களைக் குறைக்கும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு!

கோவை: கோவை IFFCO வந்த தலைவர் திலீப் சங்காணி இப்கோ–நானோவென்ஷன்ஸ் (IFFCO-NVPL) ஆராய்ச்சி மையத் விவசாயிகளின் சவால்களைக் குறைக்கும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிட்டெட்டின் அங்கமாக இப்கோ நானோ வென்ஷன்ஸ் ஆராய்ச்சி மையம் (IFFCO) செயல்பட்டு வருகிறது. கோவை தொண்டாமுத்தூர் அருகே செயல்பட்டு வரும் இந்த மையம் பயிர் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகிறது.

இதனிடையே இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் (NCUI), குஜராத் மாநில கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் (GUJCOMASOL) மற்றும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனத்தின் (IFFCO) தலைவரான திலீப் சங்காணி கோவை இப்கோ–நானோவென்ஷன்ஸ் (IFFCO-NVPL) ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள், மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறனை அதிகரித்து, வறட்சி மற்றும் அதிக வெப்பம் போன்ற சூழ்நிலைகளுக்கு எதிரான பயிர்களின் தாங்கும் திறனை உயர்த்தும் வகையில் IFFCO-NVPL தயாரித்துள்ள ‘தார்அம்ருத் கோல்ட்” இயற்கை உரம் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர், அங்குள்ள நவீன ஆய்வகங்களை பார்வையிட்டு, விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி குழுக்களுடன் கலந்துரையாடியபின், நானோவென்ஷன்ஸ் நிறுவனத்தின் புதுமையான தயாரிப்புகள் மற்றும் விஞ்ஞானச் சிறப்பை பாராட்டினார்.

நிகழ்ச்சியில் திலீப் சங்காணி பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்ச்ர் அமித் ஷா ஆகியோர், “ஒத்துழைப்பின் மூலம் செழிப்பு” என்ற தொலைநோக்கு இயக்கத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

இரசாயன உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டை குறைத்து, இப்கோ நானோ உரங்கள், தார் அம்ருத் கோல்ட் போன்ற உரங்களை இரசாயன உரங்களுக்கு மாற்றாக ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய உரங்கள் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி , சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, நிலையான விவசாயத்திற்கு வழிவகுக்கும்.

இப்கோ மற்றும் நானோவென்ஷன்ஸ் அதிகாரிகள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இம்முயற்சிகள் நிலையான மற்றும் நீடித்த விவசாயத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் ” என்றார்.

இதனைத் தொடர்ந்து இப்கோவின் அனைத்து மாநில விற்பனை மேலாளார்களிடமும் பேசுகையில், “தரமான, ஊட்டச்சத்து திறன் கொண்ட தயாரிப்புகளை விவசாயிகளுக்கு அளித்து பயிர் உற்பத்தியை மேம்படுத்தவும் , விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், இப்கோ நிர்வாக இயக்குநர், கே.ஜே.படேல், இயக்குநர் (CRS) பீரிந்தர் சிங், இப்கோ–நானோவென்ஷன்ஸின் நிர்வாக இயக்குநர் அ.லக்ஷ்மணன், இப்கோ கலோல் நானோ ஆலையின் தலைவர், பி.கே.சிங், அனைத்து மாநில விற்பனை மேலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் இப்கோ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Recent News

Video

Join WhatsApp