கோவை: கோவைக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பலாப்பழம் சீசன் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் வரை நீடிக்கும். கோவைக்கு கடந்த மார்ச் மாதம் முதலே பலாப்பழம் வரத்து தொடங்கியது.
கோவைக்கு பன்ருட்டி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பலாப்பழம் விற்பனைக்காக வருகிறது.
தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில், உக்கடம் புல்லுக்காடு அருகே உள்ள பழ மார்க்கெட்டில், பலாப்பழம் கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவற்றில் புதுக்கோட்டை பலாப்பழம் தித்திப்பாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இனி வரும் நாட்களில் பலாப்பழங்களின் வரத்து அதிகரித்தால், அதன் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.