iQOO Neo 10R இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகிறது; Trailer Video

iQOO நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன் மார்ச் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

iQOO (I Quest On and On) என்பது ஒரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம். கடந்த 2019ம் ஆண்டு Vivoவின் துணை நிறுவனமாக அறிமுகமான iQOO, பின்னர் தனி பிராண்டாக வளர்ந்துள்ளது.

இந்த நிறுவனம் தனது பிரீமியம் ஸ்மார்போன்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பான Neo 10R ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் மார்ச் 11ம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட் போன் Raging Blue மற்றும் MoonKnight Titanium என்ற இரண்டுவண்ணங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

iQOO நிறுவனத்தின் Neo வரிசையில் முதன் முதலாக வெளியிடப்படும் ‘R’ சீரிஸ் போன் இது. One plus நிறுவனத்தைப் போன்ற இந்த நிறுவனமும் தனது மாடல்களுக்கு R வரிசையை தற்போது வழங்கியுள்ளது.

அடுத்த மாதம் 11ம் தேதி வெளியாகும் iQOO Neo 10R மொபைலை iQOO நிறுவனத்தின் இணையதளத்திலும், அமேசானிலும் வாங்கிக் கொள்ளலாம்.

விவரங்கள்
கேமரா
  1. Screen – 6.78-inch AMOLED
  2. Rate – 144Hz refresh rate
  3. Ram – 8GB/12GB
  4. Storage – 256GB/512GB
பேட்டரி

இந்த மாடலுக்கு உண்டான விவரங்கள் அதன் முன் வெளியீட்டின் அனுமானத்தில் தொகுக்கப்பட்டவை. இதில் மாறுதல்கள் இருக்கலாம். iQOO நிறுவனம் இத்துடன் சேர்ந்து வேறு சில ஸ்மார்ட் போன்களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டமம் | Today Rasipalan

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினபலன்கள், தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Today Rasipalan

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...