Gold Rate: வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்! முடிச்சுவிட்டீங்க போங்க…!

கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை மீதான இறக்குமதி வரி கடந்தாண்டு குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை அதிரடியாக சரிவைச் சந்தித்தது. வெள்ளி விலையும் வீழ்ச்சியடைந்தது.

மிகக்குறுகிய காலமே விலை சரிவு நீடித்தது. அதன்பின், தங்கம் விலை தாறுமாறாக அதிகரிக்கத் தொடங்கியது.

Advertisement

ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,150க்கு விற்பனையானது. ஒன்றரை மாத காலகட்டத்தில் தங்கம் விலை கிராமுக்கு சுமார் ரூ.1,000 அதிகரித்துள்ளது.

கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது. புதிய உச்சமாக தற்போது ஒரு கிராம் ரூ.8,060க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் ரூ.64,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 520 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Today Horoscope | ஜூன் 1 ராசிபலன்

ஜூன் 1 ராசிபலனில் மேஷத்திற்கு சந்திராஷ்டம எச்சரிக்கை; பல ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் குடும்ப நன்மைகள் காத்திருக்கின்றன.

Video

அன்னூர் பகுதியில் பிக்கப் வாகனம் மீது மோதிய பொலிரோ- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் அருகே நின்று இருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ காரின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில்...