கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டைலர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்த நிலையில் ஐந்து நாள் காவலில் விசாரிக்க அனுமதி.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி பல பகுதிகளில் தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த மொத்தம் 158 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்த கோவை கரும்புக்கடையைச் சேர்ந்த டெய்லர் ராஜா என்பவர் கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை 28 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் டெய்லர் ராஜா தயாரித்து கொடுத்த வெடிகுண்டுகளை தான் கோவையில் பல இடங்களில் வைத்து வெடிக்கச் செய்தது தெரிய வந்தது எனவே, டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையில் முடிவு செய்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதற்காக கோவையில் உள்ள ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்ய நிலையில் ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கிய உத்தரவிட்டு உள்ளார்.
டைலர் ராஜா வெடிகுண்டு தயாரிப்பில் திறமையானவர். கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பே கோவை, மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி சிறை வாரன்களை கொலை செய்து உள்ளார். அவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பல்வேறு வகையான வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்து உள்ளார். மேலும் வெடிகுண்டுகளை எங்கு ? வைப்பது எப்பொழுது வெடிக்க செய்வது ? என்பது உள்ளிட்ட ஆலோசனைகளையும் தனது 20 வயதிலேயே வழங்கி உள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த பிறகு டெய்லர் ராஜா தனது பெயரை அடிக்கடி மாற்றி உள்ளார். அவர் கடைசியாக கர்நாடகாவில் தலைமுறைவாக இருந்த போது காய்கறி வியாபாரம் செய்து உள்ளார். இதற்கு இடையே அவர் பலமுறை கோவைக்கு வந்து சென்றதும் பலரை சந்தித்து விட்டு சென்றதும், தெரிய வந்து உள்ளது.
அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தவும், இது தொடர்பாக டெய்லர் ராஜாவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை அன்று காவல் துறையினர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில் வருகிற 21 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.