கோவை: அரசு விடுதிகளில் கராத்தே பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கான தகுதிகள் என்னென்னவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே ஆகிய தற்காப்புக் கலையில் அடிப்படைப் பயிற்சி அளிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கராத்தே அடிப்படை பயிற்சியினை 3 மாதங்களுக்கு ஒரு வாரத்திற்கு 3 பயிற்சிகள் வீதம் 36 பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க நிறுவனத்தின் தகுதிகளாக
குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், தொழிற்நுட்பக் கல்வித் தகுதிகள் கராத்தே சான்றிதழ் பயிற்சி (Certificate course) வேண்டும்,
பெண் பயிற்சியாளர்கள் இருக்கும் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Don 4th degree in Karate (Black belt) வழங்கப்படும்,
கராத்தே அடிப்படை பயிற்சி வழங்க தேர்ந்தெடுக்கும் நிறுவனமானது அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கிய அனுபவம் இருக்க வேண்டும்.
கராத்தே பயிற்சியினை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 22.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.