வெகு விமர்சையாக நடைபெற்ற கோவை கற்கிமலை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை: கோவையில் கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் மகா அன்னதானம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை கணுவாய் அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது.

கோவை கணுவாய் பகுதியில் அமைந்துள்ளது பழமையான அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோவில்
இக்கோவில் கோவில் புணரமைக்கப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா 12 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. மஹா கணபதி ஹோமத்துடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.

அருள்மிகு குன்று பெருமாள் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முதற்கால வேல்வி பூஜைகள் நடைபெற்றது.

இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றது. 108 மூலிகைகளைக் கொண்டு வேள்வி நடைபெற்றது. இதையடுத்து புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு. கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. தொடர்ந்து கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

கோபுர கலசங்களுக்கு டிரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் அறக்கட்டளை நிர்வாக குழு, திருப்பணிக்குழு மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.