கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 23ம் தேதி மூடப்பட்ட கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவையின் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா. தொடர் மழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா கடந்த 23ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனிடையே தற்போது நீர்வரத்து சீரானதால் கோவை குற்றாலம் நாளை (ஜூலை 31) முதல் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.