மூடப்பட்ட கோவை குற்றாலம் நாளை திறப்பு…

கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் மீண்டும் நாளை முதல் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்குகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் மீண்டும் நாளை திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை குற்றாலத்தில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதை வனத்துறையினர் கண்காணித்து, நீர்வரத்து அதிகரித்து இருந்தால், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பார்கள். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்தது, இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மழைப்பொழிவு குறைந்ததால், அருவியில் நீர்வரத்தும் குறைந்து உள்ளது. இதனால் 15 நாட்களுக்கு பிறகு நாளை முதல் கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட வழங்கப்படும் என போளுவாம்பட்டி வனத் துறையினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

Advertisement

Recent News

டாஸ்மாக்கை மூடுவது மட்டும் தீர்வல்ல- கோவையில் CITU மாநில தலைவர் பேட்டி

கோவை: சிஐடியு 16-வது மாநில மாநாடு கோவையில் எழுச்சியுடன் தொடங்கியது. கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது. நவம்பர் 9-ஆம் தேதி வரை...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp