கோவை: கோவையில் LPG பங்க் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த ஆட்டோ LPG எரிவாயு பங்க் திடீரென மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவையில் இயங்கி வரும் பெரும்பாலான ஆட்டோ LPG எரிவாயு பங்குகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. LPG கேஸ் லோடு வந்த பின்னரே மீண்டும் விநியோகம் தொடங்கும் என பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறபடுகிறது.
இதனால் வாகனங்களுக்கு எரிவாயு நிரப்ப வந்த ஆட்டோ மற்றும் கார் ஓட்டிகள் பலரும் எரிவாயு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
டீசலை ஒப்பிடும்போது LPG எரிவாயு லிட்டருக்கு ரூ.64.80 என்ற குறைந்த விலையில் கிடைப்பதால் வாடகை வாகன ஓட்டிகள் அதிகமாக LPGயை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் LPG கிடைக்காமல் வாகன ஒட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தேவையான அளவு LPG விநியோகம் விரைவில் செய்யப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கையாக உள்ளது .

