Header Top Ad
Header Top Ad

மருதமலை கோவில் உண்டியல் திறப்பு- காணிக்கை வசூல் எவ்வளவு தெரியுமா?

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டதில் ரூ.81.82 லட்சம் காணிக்கையாக வசூலாகி உள்ளது!!

கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தில் அமைந்து உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூன் 27) நிரந்தர உண்டியல் திறக்கும் பணிகள் நடைபெற்றன. இதில், பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டு, முறையாக பதிவு செய்யப்பட்டன.

Advertisement

உண்டியல் திறப்பில், 5,76,52,870 ரூபாய் நிரந்தர உண்டியல் தொகையாகவும், 1,28,347 ரூபாய் திருப் பணி உண்டியலிலும், 43,89,100 ரூபாய் உபகோயில் உண்டியலிலும், 3,57,131 ரூபாய் கோசாலை உண்டியலிலும் காணிக்கையாக வந்து உள்ளது. மொத்தம் 81,82,239 ரூபாய் ரொக்கம் பெறப்பட்டு உள்ளது. மேலும், 115 கிராம் பொன், 5 கிலோ 250 கிராம் வெள்ளி மற்றும் 10 கிலோ பித்தளைப் பொருட்களும் காணிக்கையாக வந்துள்ளன.

இந்த பணியின் போது திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜெயகுமார், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் செந்தில்குமார், பட்டீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் விமலா, அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராசரத்தினம், பேரூர் சரக ஆய்வாளர் நமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காணிக்கைகள் அனைத்தும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement

Recent News