கோவை: சமரச தீர்வு தினம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகனத்தைத் தொடங்கி வைத்தார்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, விரைந்து தீர்த்து வைக்கின்றன சமரச திர்வு மையங்கள்.
இதனிடையே தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் வழிகாட்டுதல் படி, கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் கோவை நீதிமன்றம் வளாகத்தில் சமரச தீர்வு தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மையத்தின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா சமரச தீர்வு தொடர்பான விழிப்புணர்வு பலகையினை திறந்து வைத்தார்.
பின்னர் சமரசம் தீர்வு தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சமரச மையத்தைச் சேர்ந்த தீர்வர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், சட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் உள்ள பதாகைகளைக் கையில் ஏந்திய படி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.