கோவையில் தாய், மகள்களுக்கு வெட்டு; இரண்டாவது கணவர் கைது!

கோவை: கோவையில் தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர்.

துடியலூர் அருகே உள்ள சாஸ்திரி வீதியைச் சேர்ந்தவர் செல்வி (36). இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் செல்வி கணவரை புரிந்தார். அதன் பின்னர் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கார்த்திக் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று செல்வியை கார்த்திக் தாக்கியுள்ளார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது 2 மகள்களும் கார்த்திக்கை தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அருவாளை எடுத்து செல்வி மற்றும் அவரது மகள்களை வெட்டினார்.

இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வடமதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து செல்வி துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விஜய் முதல்வர் தான், துணை முதல்வர் அல்ல- கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

கோவை: விஜய் முதல்வராகத்தான் வந்துள்ளாரே தவிர துணை முதல்வர் ஆவதற்கு இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.