கோவை: உக்கடம் பெரிய குளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர்…
கோவை, உக்கடம் பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் மற்றும் வீல் சேர் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சி சுவாதர்ம பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு இசைக்கு ஏற்பவாரு நடனமாடி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தனர்.
தொடர்ந்து பெரியவர்கள் வீல் சேரில் அமர்ந்தவாறு பாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்தினர். மேலும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மறந்து பொதுமக்களுடன் உற்சாகமாக பாடல் பாடி நடனமாடி அசத்தியது பொது மக்கள் கண்டுகளித்தனர்.