Header Top Ad
Header Top Ad

நெற்றியில் நாமம்- கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவையில் ஓய்வூதியம், ஊதிய திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நெற்றியில் நாமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement
Lazy Placeholder

தேர்தல் வாக்குறுதி படி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக 6750 ரூபாய் வழங்கிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் படி 2.57 காரணியால் பென்ஷன் மற்றும் ஊதிய திருத்தத்தை அமைத்திட வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்டத்தை சார்ந்த ஓய்வு பெற்றவர்கள் உட்பட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும் அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

பல ஆண்டுகளாக 2000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இது தற்போதைய பொருளாதாரத்திற்கு போதவில்லை என்றும் எனவே தமிழக அரசு தேர்தலுக்குள் எங்களை அழைத்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement
Lazy Placeholder

Recent News

Latest Articles