Header Top Ad
Header Top Ad

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: தனுஷ்-சரண்யா பொன்வண்ணன் டான்ஸ்: வீடியோ உள்ளே!

தனுஷ் இயக்கத்தில் வெளியான மூன்றாவது திரைப்படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் தனுஷ்-சரண்யா பொன்வண்ணன் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

காதல், நட்பு போன்ற எளிய கதையை புதிய கோணத்தில் அழகாகச் சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

இந்த படத்தில், தனுசின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருடன் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரண்யா

ஏற்கனவே வி.ஐ.பி படத்தில் தனுஷ் அம்மாவாக நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தில், கதாநாயகனின் தாயாக நடித்துள்ளார்.

Advertisement

வழக்கமான அம்மா வேடத்திலிருந்து சிறிது மாறுபட்ட பாணியில் அவர் நடித்துள்ளார். இதற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடேங்கப்பா டான்ஸ்

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் தனுஷ் சரண்யாவுக்கு நடனம் சொல்லிக்கொடுத்துள்ளார். அந்தப் படப்பிடிப்பு காட்சிகளை நடிகை சரண்யா பொன்வண்ணன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

வெளியான முதள் நாளில் இப்படம் உலக அளவில் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை பிரியங்கா மோகன், கோல்டர் ஸ்பேரோ என்ற ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.

Recent News