கோவை: கோவையில் மர்மக் காய்ச்சல் பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
சீதோஷண மாற்றத்தால் குழந்தைகள், பொதுமக்கள் பலரும் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதியடைந்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை, கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவிவருவதாக தகவல் பரவியுள்ளது.
இதனால் கோவையில் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறுகையில், “கோவையில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த அச்சம் இல்லை. மக்கள் பீதி அடையத் தேவையில்லை.
சுகாதாரத் துறை அதிகாரிகள் பகுதி வாரியாக பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் தினசரி உள் நோயாளிகள் அனுமதி கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.