Header Top Ad
Header Top Ad

கோவை, திருப்பூரில் விவசாய நிலங்களுக்கு இடையே எண்ணெய் குழாய்- உயிரை மாய்த்து கொள்ள வேண்டியது தான் விவசாயிகள் வேதனை

கோவை: IDPL எண்ணெய் குழாய் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் உயிரை மாய்த்து கொள்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்…

Advertisement

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் IDPL எண்ணெய் குழாய் திட்டம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் வரை சுமார் 320 கிமீ தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கோவை மாவட்டம் இருகூர் முதல் திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டர் தூரத்துக்கு விவசாய நிலங்களுக்கு இடையே குழாய் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் பாதிப்படுவதாகவும் எனவே இத்திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய விவசாயிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சாலையோரமாக இந்த திட்டத்தை செயல்படுத்த போராடி வருவதாகவும்
இது சம்பந்தமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மத்திய துறை செயலாளர் பிபிசிஎல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர சந்தித்து மனு கொடுத்திருப்பதாக கூறினர். இந்த குழாய்களை சாலையோரமாக அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து திட்டத்தையும் நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.

இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நிலங்களுக்கான கடன் பெற முடிவதில்லை என்றும் கூறினர். விவசாயிகள் விட்டு கொடுத்த நிலங்களில் தான் வளர்ச்சியே வந்துள்ளதாகவும் இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement

1 COMMENT

Comments are closed.

Recent News