கோவையில் சிகிச்சை பெறுகிறார் ஓ.பி.எஸ்

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

கோவை கணபதியில் இயற்கை நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.

Advertisement

இதேபோல், நேற்று கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம் கணபதிக்கு சென்று அங்குள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வருகிறார். இங்கு நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்படும்.

இன்னும் 2 அல்லது 3 நாட்கள் அவர் அங்கு தங்கி சிகிச்சை பெறுவார் என தெரிய வந்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

இந்த விழாவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வழக்கமாக பாஜ மேலிட தலைவர்களை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அமித்ஷா சந்திப்பை தவிர்த்துவிட்டு, கோவையில் இயற்கை நல சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Recent News