Header Top Ad
Header Top Ad

300க்கும் மேற்பட்ட அரங்குகள்… லட்சக்கணக்கான புத்தகங்கள்… அழைக்கிறது கோவை புத்தகக் கண்காட்சி!

கோவை: கோவையில் துவங்கிய புத்தக திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

கோவை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா-2025 இன்று துவங்கியது. வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற கூடிய இந்த புத்தக திருவிழாவில் 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு கோவை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் சார்ந்த அச்சகங்கள் அவர்களது புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இலக்கியம், இலக்கணம், புராணக் கதைகள், குழந்தைகளுக்கான சிறுகதைகள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, காமிக்ஸ், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், அரசு தேர்வுகளுக்கான புத்தகங்கள், பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள், கவிதை புத்தகங்களும் மேலும் குழந்தைகளுக்கான Activities Books, Maths Activities, போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் நாள்தோறும் மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நாள்தோறும் பல்வேறு சாதனையாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்பதால் குடும்பத்துடன் இந்த புத்தக கண்காட்சிக்கு வருகை தரலாம்

Advertisement

Recent News