Header Top Ad
Header Top Ad

முருகா திரும்பு என்று ஆழைத்ததும் கோவையில் தோகையை விரித்தபடி திரும்பிய மயில் – கண்கொள்ளா Video காட்சி!

கோவை: கோவையில் மழை நேரத்தில் மயில் ஒன்றி தோகையை விரித்து ஆடும் ரம்யமான காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், நகரப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

இதனிடையே காளப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பு அருகே, சாரல் மழை ஓய்ந்த நேரத்தில், மயில் ஒன்று தன் இணையை ஈர்க்கும் விதமாக தோகையை விரித்து ஆடிய காட்சியை நமது வாசகர் ஜெயவர்தனவேலு வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அந்த விடியோவில் அவர், “முருகா திரும்பு” என்று அழைக்க அவரை நோக்கி திரும்பும் மயில், தோகையை சிலிர்த்தபடி நிற்பது, வீடியோவை பார்ப்பவர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

தப்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Recent News