கோவை: கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. சென்னையில் முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில், மத்திய மா நில அரசுகள் சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய தமிழ்நாடு பொது சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் வெளி நோயாளிகள் மற்றும், நோயாளிகளின் உறவினர்கள் மாஸ்க் அணிந்து உள்ளே வர மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மருத்துவமனையில் உள்ள காவலாளிகள் மருத்துவமனைக்கு வருபவர்கள் மாஸ்க் அணிந்து உள்ளே வர வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.