7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகம்- கோவை கலைஞரின் வடிவமைப்பு…

கோவை: 7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகம் மினியச்சர் செய்து அசத்தியுள்ளார் கோவையை சேர்ந்த கலைஞர் UMT ராஜா.

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

தேர்தலுக்குள் கட்டுமான பணிகள் முடித்து திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பிப்ரவரி மாதம் கட்டிடம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிடத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா எனும் கலைஞர் 7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகத்தின் முகப்பினை மினியச்சராக வடிவமைத்துள்ளார்.

மேலும் பெரியார் பூதக்கண்ணாடி மூலம் இதனை பார்ப்பது போன்றும் “உலகமே உற்று நோக்கும் பெரியாரின் அறிவுலகம்” என்ற வாசத்துடன் இதனை வடிவமைத்துள்ளார். மாணவர்கள் மற்றும் கல்வியியலாளர்களுக்கு உதவும் வகையில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருவதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதனை வடிவமைத்துள்ளதாகவும் இதன் திறப்பு விழாவின் பொழுது முதல்வரிடம் துணை மேயர் வெற்றிசெல்வன் மூலமாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp