கோவை: கோவையில் அக் 4, 5ம் தேதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள நிலையில் போலீஸ் அனுமதி கேட்டி தவெக நிர்வாகிகள் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வருகிற அக்டோபர் மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் கோவையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதனைத்தொடர்ந்து இதற்கு அனுமதி கேட்டு கோவை மாவட்ட த.வெ.க.வினர் போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் கழகத் தலைவர் விஜய், சாலை மார்க்கமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு வருகை புரிந்து மக்களைச் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது சிவானந்த காலனி, ராஜு நாயுடு வீதி, டாடாபாத் (No.5 பேருந்து நிறுத்தம் அருகில்)
ஒலி பெருக்கி மூலம் பேசவுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.