கோவை: போதைப் பொருளுக்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதனைப் பறைசாற்றும் விதமாகவும், போதைப் பொருளுக்கு எதிராகவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் பொதுமக்களுடன் இணைந்து, மாநகரைச் சுற்றி 79 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பயணம், டவுன்ஹால், செல்வபுரம், பேரூர் வழியாக கோவை குற்றாலம் சென்று,

அங்கிருந்து ஈஷா மையம், வடவள்ளி, அண்ணா மேம்பாலம் வழியாக பி.ஆர்.எஸ் மைதானத்தை அடைந்தது.
இதில் காவல் ஆணையருடன் தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.