கோவை: கோவையில் பழங்குடியினருக்கான புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சியில் தம்மம்பதி கல்லாங்குத்து பகுதியில், அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் மூலம் தலா ரூ.4.37 இலட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினருக்கு கட்டப்பட்டுள்ள 21 புதிய வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி முன்னிலையில் பயனாளிகளே திறந்து வைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சியில் தம்மம்பதி கல்லாங்குத்து பகுதியில், அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் மூலம் தலா ரூ.4.37 இலட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினருக்கு 21 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளே திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் 12 வது வார்டு தம்பம்பதி கல்லாங்குத்துப் பகுதியில் அனைவருக்கும் வீடும் திட்டம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் தலா ரூ.4.37 இலட்சம் மதிப்பீட்டில் 93 வீடுகள் மொத்தம் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் கட்டும்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 21 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதுமீதமுள்ள வீடுகள் கட்டும் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்கு முடிவுடையும். இப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி, சமுதாயக்கூடம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அண்ணா நகரில் 30 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி காளியாபுரம் மேட்டில் அயோத்திதாஸ் பண்டிதர் திட்டத்தின் மூலம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



