Power Cut in Coimbatore: கோவையில் ஜூலை 10ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதந்தோறும் பராமரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.
அதன்படி, கோவையில் ஜூலை 10ம் தேதி மின் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
ஜூலை 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைபடும்:-
Power Cut in Coimbatore
பீளமேடு துணை மின் நிலையம்:-
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புளியகுளம், கணபதி இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட்,
ஆவரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி ரோடு ( ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்.
கோவில்பாளையம் துணை மின் நிலையம்:-
சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்ப பாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரஹார சாமக்குளம்,
கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கள்ளிப்பாளையம், மோண்டிக்கல்லிபுதூர்.
மேற்குறிப்பிட்ட இடங்களைத் தவிர, அவ்வேளையில் மின் பராமரிப்பு பணிகள் விரிவடையும் பட்சத்தில் மேலும் சில இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்.
இந்த தகவலை உங்கள் அந்தந்த பகுதி மக்களுடன் பகிர்ந்து உதவிடுவீர்.