மருதமலையில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது!

கோவை: மருதமலையில் சாமியார் வேடமணிந்து வெள்ளி வேல் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 4ம் தேதி நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, சாமியார் வேடத்தில் வந்த நபர் ஒருவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை அடி உயரம் கொண்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேலை திருடிச் சென்றார்.

போலீஸ் பாதுகாப்பு இருந்த நேரத்தி வெள்ளி வேல் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. அதில், சாமியார் வேடத்தில் வந்தவர் வேலை திருடியது தெரியவந்தது.

அந்த காட்சியை இங்கே காணலாம்:-

இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வந்த நிலையில், இன்று வெள்ளி வேல் திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் கேஸ் சிலிண்டர் பதுக்கி வைத்து விற்பனை- ஏஜென்சி உரிமையாளர் கைது…

கோவை: கோவையில் வணிக கேஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கேஸ் ஏஜென்சி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். வளைகுடா நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பல்வேறு...

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...