கோவை: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கோவையில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தி மொழியில் ஊரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை கண்டிக்கும் விதமாகவும் அதனை அழிக்க வலியுறுத்தியும் மே பதினேழு இயக்கம் சார்பில் கோவை ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மதிமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழி ஆதரவாகவும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகவும் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீதும் இந்தி மொழியை திணித்து வரக்கூடிய சூழலில் சமீப காலங்களாக ரயில் நிலையங்களில் இந்தி மொழியை முதன்மையாக்கி வைத்துள்ளார்கள் என தெரிவித்தார்.
மோடியும் அமித்ஷாவும் எதை எதையோ பேசி இந்தியை முதன்மையாக்க வேண்டும் என்றும் ஆங்கில மொழியை அகற்ற வேண்டும் என்றும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் இது இருமொழிக் கொள்கை உள்ள மாநிலங்களின் மீது பாஜக அரசு தொடுத்துள்ள போர் என தெரிவித்தார்.
மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்வில் பெரியாரின் புகைப்படம் இடம்பெற்று பின்னர் அகற்றப்பட்டது குறித்தான கேள்விக்கு, மோடி நடத்தும் நிகழ்வில் பெரியார் படம் இல்லாமல் இருப்பதே சிறப்பு அதனை வரவேற்கிறோம், அதே சமயம் அது அதிமுக நிகழ்வாக இருந்து பெரியார் படம் நீக்கப்பட்டு இருந்தால் கண்டித்து இருப்போம், ஆனால் பாஜக நடத்தும் நிகழ்வில் பெரியார் படம் வைத்து அவர்கள் பெரியாரை ஏற்றுக் கொண்டார்கள் என்று நடித்தால் அது தமிழ்நாட்டிற்கு ஆபத்து என பதிலளித்தார்.
தொடர்ந்து பேட்டி அளித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் மொழியை உலகெங்கிலும் கொண்டு செல்கிறேன் என்று பிரதமர் மோடியின் நாடகம் நடத்தி வருவதாகவும் ரயில் நிலையங்களில் தமிழ் மொழியில் உள்ள அறிவிப்புகளை எல்லாம் இந்தி மொழியாக மாற்றி உள்ளார்கள் என தெரிவித்தார்.
இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம் பெரியார் காலத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது தற்பொழுதும் தொடர்வதாக தெரிவித்தார். உடனடியாக இந்தி மொழி அகற்றப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் இனிவரும் நாட்களில் பொதுமக்களே இந்தி மொழியை அழிப்பார்கள் என தெரிவித்தார்.


இன்று எந்த 10,12,காலேஜ் படிக்கும் குழந்தைகளுக்கும் தமிழை சரியாக வாசிக்கவோ அல்லது பிழையின்றி எழுதவோ தெரியாத நிலை தான் இருக்கு…
இவர்கள் ஹிந்தியை ஒழிப்பதாக கூறி ஆங்கிலத்தை வளர்த்து கடையில் தமிழை கிட்டத்தட்ட அழித்தே விட்டார்கள்..
மக்கள் ஒன்னும் ஏமாளிகள் கிடையாது… அதிக மொழி கற்று கொள்ளும் குழந்தைகள் வாழ்க்கைத்தரம் நிச்சயம் மேலே உயர செல்லும் என்பதை இன்றைய பெற்றோர் நன்கு உணர்ந்தவர்கள்…
நம் தாய்மொழி தமிழை காப்போம்
நம் குழந்தைகளுக்கு நிறைய மொழிகள் கற்று குடுப்போம்…
போலி அரசியல்வாதிகளின் கூற்றை புறக்கணிப்போம்…
பிச்சைக்காரனுகளுக்கும் இவனுங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல. பிழைப்புக்காக நம்ம குழந்தைகள் வாழ்க்கையோட விளையாடறானுகள் 😡