கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியை பார்க்கச் சென்றவர்களைப் பார்த்து ரஜினி கையசத்து உற்சாகப்படுத்திச் சென்றார்.
ஜெய்லர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் கேரள பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பிற்காக கடந்த 10ம் தேதி விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயிலர் 2 படப்பிடிப்பு கோவையில் 20 நாட்கள் நடைபெறும், படம் வெளியீடு தேதி தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
தற்போது படத்தின் ஷூட்டிங் கோவை-கேரள எல்லையான அட்டப்பாடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரஜினியின் பட ஷூட்டிங் நடைபெறுவதை அறிந்த பொதுமக்கள், ஷூட்டிங் நடைபெறும் இடத்திலும், ரஜினி தங்கியுள்ள ஹோட்டல் முன்பும் திரண்டனர்.
ஷூட்டுங் முடிந்து ஹோட்டலுக்கு வந்த ரஜினி ஆங்கு திரண்டிருந்த ரசிகர்களைப் பார்த்து தனது காரில் இருந்து இறங்கினார். மேலும், பொதுமக்களைப் பார்த்து கையசத்து, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைகளை உயர்த்தி கும்பிட்டார்.
இதில் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர்.
அதன் வீடியோ காட்சிகளை இங்கு பார்க்கலாம்…
எங்கள் YouTube சேனலை Subscribe செய்து ஆதரவு தாரீர்…