ரமலான் நோன்பு- பள்ளிவாசல்களுக்கு கோவை ஆட்சியர் அறிவிப்பு…

கோவை: ரமலான் நோன்புக்கு தேவைப்படும் பச்சரிசி பட்டியலை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டுகளை போலவே 2026-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்று வருகின்றன.

2026-ஆம் ஆண்டு ராமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்கள் நோன்பு கஞ்சி வழங்குவதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி பெறுவதற்கு, சென்ற ஆண்டு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி பெற்ற பள்ளிவாசல்களிடமிருந்து தேவைப்பட்டியல் வரவேற்கப்படுகிறது.

எனவே பள்ளிவாசல் மொத்த அனுமதிபெற உரிய தேவைப்பட்டியலை கோயம்புத்தூர் மாவட்ட வழங்கல் சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அலுவலகத்தில் உடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.