தூய்மை பணியாளருக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் – தரமற்ற உணவை உண்ண முடியாமல் குப்பை தொட்டியில் கொட்டிய வீடியோ…!

கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முதல்வரின் காலை உணவு தரமற்றதாக இருந்ததால், அதை சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisement

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதித் தொடங்கப்பட்ட ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சர்ச்சையில் கிளம்பியுள்ள நிலையில், கோவையிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, உண்ண முடியாத அளவிற்குத் தரமற்றதாக இருந்ததால், அந்த உணவைத் போய் குப்பை தொட்டியில் கொட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.

அதிகாலையிலேயே எழுந்து வந்து நகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பசியுடன் பணியாற்றக் கூடாது என்பதற்காக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு கல் போன்று கட்டியாக இறுக்கமாக இருந்ததை கையில் எடுக்க முடியாமல், அதை குப்பை கூடையில் கொட்டினர்.

நாங்கள் குப்பைகளைச் சுத்தம் செய்கிறோம் என்பதற்காக, எங்களுக்கும் குப்பை போன்ற உணவையே வழங்குவதா ? இதுவா முதல்வர் சொன்ன திட்டம்?” எனப் பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். பசியால் வாடிய போதிலும், அந்த உணவைச் சாப்பிடப் பிடிக்காமல் பணியாளர்கள் அதனைத் குப்பை கூடையில் கொட்டினர்.

Advertisement

அந்த வீடியோவில் “பசியோடு வேலை செய்கிறோம், ஆனால் இதைப் எப்படி சாப்பிட முடியும், கொட்டவே முடியல கல்லு மாதிரி இருக்கு மைதாவுல பண்ணி இருக்காங்க போல” என்று தூய்மை பணியாளர்கள் கொந்தளிந்துள்ள காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...