கோவை: கோவையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக சில வதந்தியை கிளப்பியுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சியினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாடாபாத் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் துரை.செந்தமிழ்ச் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஆதிதமிழர் பேரவை இரா.அதியமான், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார், கூட்டணி கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த கூட்டணிக் கட்சியினர் தங்களது கைகளில் அவரவர் சார்ந்த கட்சிக் கொடிகளைப் பிடித்தவாறு நின்றிருந்தனர்.
கோல்மால்

அப்போது கூட்டத்தில் பாகிஸ்தான் கொடி பறப்பதாக சிலர் சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்பத் தொடங்கினர்.
ஆனால், உண்மையில் அது பாகிஸ்தான் கொடியல்ல. அந்த கொடி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்குச் சொந்தமான கொடி. இதனை பலரும் பகிர்ந்து வதந்தி பரப்பியவர்களை விளாசி வருகின்றனர்.


