கோவையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாம்பு; வனத்துறை உதவி தேவை! – வீடியோ உள்ளே

கோவை: கோவையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாம்பை மீட்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை ப்ரூக் பாண்ட் சாலையை அடுத்த காளீஸ்வரா மில் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் இன்று காலை பாம்பு ஒன்று படுத்திருந்தது.

அச்சமடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அதனைப் பார்த்த போது அதற்கு வாயில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

வாயில் காயத்துடன் பாம்பு அப்பகுதியில் அங்கும் இங்கும் அலைந்து வருவதாகவும், வனத்துறையினர் பாம்பை மீட்பு உதவ வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp