கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடித்த மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடித்த மாணவர்களுக்காக சிறப்பு குழு தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி குறித்தான சந்தேகங்கள் கல்வி கடன் சார்ந்த கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
கல்வி கடன் வழிகாட்டுதல்கள், புதிய படிப்புகள் குறித்தும் இந்த முகாமில் மாணவ மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரடியாக குறைகளை கேட்டறிந்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.