கோவை: கோவை மாநகரில் நாளை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ள நிலையில், இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

மேலும், இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.
இதனிடையே, கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், வடவள்ளி ஸ்ரீ மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஆகஸ்ட் 30 – சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
பொது மக்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடைய கோவை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த செய்தியை உங்கள் சுற்றுவட்டார மக்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள் வாசகர்களே