Header Top Ad
Header Top Ad

ஆழியாறில் குளித்த மாணவர்கள் பரிதாப பலி! மக்களே கவனம்!

கோவை: ஆழியாறு அணை ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடை விடுமுறை என்பதால் பொள்ளாச்சி ஆழியாறு அணைக்கு பலரும் சுற்றுலா சென்று வருகின்றனர். இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் தனியார் பிசியோதெரபி கல்லூரியில் பயின்று வரும் 25 மாணவர்கள் கோடை சுற்றுலா சென்றனர்.

சுற்றுலாவின் ஒரு பகுதியாக அவர்கள் ஆழியாறு அணை சென்றனர். அங்கிருந்து சென்றும் ஆழியாறு அணை ஆற்றில் குளித்தனர்.

அப்போது 4ம் ஆண்டு மாணவர் ஆண்ட்ரோ செரிப் (21) என்பவர் ஆழம் அதிகமான பகுதியில் நீரில் மூழ்கித் தத்தளித்தார். அவரைக் காப்பாற்ற சக மாணவர்களான ரேவன் (21), தருண் (21) ஆகியோர் முயன்றனர்.

அப்போது மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடலைக்கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆழியாறு அணைக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Recent News