சிலிண்டருக்கு பாடை கட்டி கோவையில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்!

கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசைக் கண்டித்தும் கோவையில் த.வெ.க.,வினர் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2024 மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது.

Advertisement

தொடர்ந்து, சிலிண்டர் விலை ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆகக் குறைந்தது. தொடர்ந்து வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.

இதனிடையே திடீரென சமையல் கேஸ் விலையை ரூ.50 உயர்த்தியது மத்திய அரசு. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், மானியம் வழங்குவதாகக் கூறி வழங்காத மாநில அரசைக் கண்டித்தும், கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு, த.வெ.க.,வினர் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Recent News

கோவையில் இன்று மின்தடை

கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் பின்வருமாறு:மதுக்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்டகே.ஜி.சாவடி, பாலத்துறை, சாவடி புதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...