தமிழக அரசின் லேப்டாப் திட்டம்- கோவையில் செங்கோட்டையன் விமர்சனம்…

கோவை: வளரும் போதே பாலூட்ட வேண்டும் என தமிழக அரசு லேப்டாப் திட்டம் குறித்து செங்கோட்டையன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக அரசு லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்து, “வளரும் போதே பாலூட்ட வேண்டும்; வளர்ந்த பிறகு பாலூட்ட தேவையில்லை” என த.வெ.க. தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு லேப்டாப் வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வழங்க வேண்டியதை இப்போது வழங்குவது பொருத்தமல்ல.

அப்போது இருந்த மாணவர்களின் நிலை குறித்து கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும் என்றும் எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது கிடைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான கேள்விக்கு, யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும் என அவர் பதிலளித்தார்.
அத்துடன், “தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என மக்கள் காத்திருக்கின்றனர்.

திரைப்படத்திற்கு தடை விதிப்பது அவர்களுக்கு நல்லதல்ல. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அது வேதனைக்குரியதாக அமையும் என்றார். திரைப்படத்தை தடுக்குவது சரியான முடிவாக இருக்காது. அப்படி செய்தால் அது அவர்களுக்கே பாதகமாக முடியும் என தெரிவித்தார்.

வழக்கு தொடரப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அது என் கவனத்திற்கு வரவில்லை என்று செங்கோட்டையன் கூறினார்.

Recent News

Video

Join WhatsApp