தமிழ்நாடு: தமிழ்நாட்டில் நேற்று இரவு நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி, செங்குளம் மல்லி, சாத்தூர் , மாறனேரி ஈஞ்சார் நடுவப்பட்டி சஞ்சீவி மலை சீனியாபுரம் மொட்டமலை, வேப்பங்குளம் ஆகிய ஊர்களிளும், தூத்துக்குடியின் கோவில்பட்டி மேலும் சுற்றுவட்டாரங்களில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டது.
நேற்று இரவு 9. 06 மணியளவில் உணரப்பட்ட இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இது சிவகாசியில் இருந்து மேற்கே 2.3 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.
இதனல் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்ற போதிலும், முதல் முறையாக இப்படிப்பட்ட நில அதிர்வை உணர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்ற பீதியிலும் உறைந்துள்ளனர்.

