ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு; விவரம்… லிங்க்… இதோ…!

ஊரக வளர்ச்சித்துறையில் நேரடி நியமன வேலைவாய்ப்பு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையினர் கீழ் ஓட்டுனர், பதிவறை எழுத்தார், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.

ஓட்டுனர்

பொதுப்பிரிவில் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 18 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 18 வயது முதல் 42 வயதுடையோர் விண்ணபிக்கலாம்.

விண்ணப்பிக்கும் அனைவரும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுனர் நிலையில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.

Advertisement

பதிவறை எழுத்தர்

பொதுப்பிரிவில் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 18 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 18 வயது முதல் 37 வயதுடையோர் விண்ணபிக்கலாம்.

விண்ணப்பிக்கும் அனைவரும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர்

பொதுப்பிரிவில் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 18 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 18 வயது முதல் 37 வயதுடையோர் விண்ணபிக்கலாம்.

விண்ணப்பிக்கும் அனைவரும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும்.

இரவுக் காவலர்

பொதுப்பிரிவில் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 18 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 18 வயது முதல் 37 வயதுடையோர் விண்ணபிக்கலாம்.

விண்ணப்பிக்கும் அனைவரும் தமிழில் எழுதப் படிக்க தெரிதால் போதும்.

ஊதியம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படும்.

பொது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ரூ.100ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.50 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க பின்வரும் தமிழக அரசின் இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்: https://tnrd.tn.gov.in/

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...