கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் கலைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

கோவை: கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினர்.

Advertisement

மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் 10 நாட்களுக்கு முன்பே பண்டிகையானது துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரளவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ஓணம் பண்டிகை தற்பொழுது கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான கேரள மாணவர்களும் தமிழக மாணவர்களும் ஒன்றாக இணைந்து மலையாள மக்களின் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Advertisement

பின்னர் திருவாதிரை களி நடனம், மகாபலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து செண்டை மேளம், பலவண்ண காவடிகள் உட்பட சினிமா பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வெள்ளலூர் அகழாய்வு பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

கோவை: வெள்ளலூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர். கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அகழாய்வு பணிகளையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த...

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.