Header Top Ad
Header Top Ad

ஆசிரியர் தினம்: உங்க Teachersக்கு அழகிய கிப்ட் இதோ!

ஆசிரியர் தினம்: நம் வாழ்வில் பெற்றோருக்குப் பின் மிகப்பெரிய இடத்தை வகிப்பவர் ஆசிரியர்.

அறிவையும் ஒழுக்கத்தையும் ஒருங்கே விதைத்து, ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை அமைப்பதில் ஆசிரியரின் பங்கு அளவிட முடியாதது.

ஆசிரியர் தினம் என்பது, அவர்களின் அர்ப்பணிப்பையும் அன்பையும் நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூரும் நாளாகும். ஒரு நல்ல ஆசிரியர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை; வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கும் சின்னஞ்சிறு பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார். அவர்களின் உழைப்பும் பொறுமையும் தான் ஒவ்வொரு மாணவரையும் வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்கிறது.

எந்த தொழிலும், எந்த சாதனையும் கல்வியின் அடிப்படையில்தான் மலர்கிறது. அந்த கல்வியின் விதை நமக்குள் விதைப்பவர் ஆசிரியர் என்பதால், அவர்கள் சமுதாயத்தின் உண்மையான சிற்பிகளாக மதிக்கப்பட வேண்டும்.

இந்த ஆசிரியர் தினத்தில், ஆசிரியர்களுக்கான ரூ.500க்கு உட்பட்ட கிப்ட்களை இங்கே பகிர்ந்துள்ளோம். இவற்றில் சில இன்று அல்லது நாளை டெலிவரி ஆகும் பொருட்களாகும்.

Recent News