தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த அக்கட்சி நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்துள்ளார்.
நடிகர் விஜயின், அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா என அனைத்திலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக அரசியல் கட்சி ஆரம்பித்ததும் இவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விமர்சனங்களுக்குள் சிக்கிய விஜய்
சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு கட்சியை ஆரம்பித்து பணிகளை மேற்கொண்டு வரும் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சர்ச்சையானது.
மனைவி சங்கீதா கொடுத்த விவாகரத்து மனுவில், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துள்ளார் விஜய் என பகிரங்கமாக உடைத்திருந்தார்.
மேலும் தனக்கு அழுத்தம் வரும் பட்சத்தில் அந்த நடிகை யார் என சமூகத்திற்கு சொல்லுவேன் என கூறியிருந்தார். ஆனால் விஜய் தரப்பு இது குறித்து எதுவும் பேசவில்லை, மாறாக சினிமா தயாரிப்பாளர் மகனின் திருமணத்திற்கு நடிகை திரிஷா உடன் விஜய் பங்கேற்றது பேசுபொருளானது.

இதனிடையே தவெக சார்பாக மகளிர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்ற விஜய், பல்வேறு வாக்குறுதிகளை மகளிருக்காக அறிவித்தார். மேலும் தாய்மாமன் சீராக இது இருக்கும் என வாக்குறுதிகளை கொடுத்தார். மேலும் பேசிய அவர், என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன், அதை பற்றி நீங்கள் கவலைப்படுவதுதான் எனக்கு வேதனையாக உள்ளது. நீங்கள் கவலைப்படும் அளவுக்கு அது worth இல்லை என அவர் பேசியிருந்தார்.
தாய் மாமனுக்கு முன் தகப்பனா யோசிங்க
இதைக் கேட்ட ஷாக்கான தவெக நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், விஜய்யை கடுமையாக விளாசினார். நீங்கள் இப்படி பேசுவது, உங்கள் தொண்டர்கள், ரசிகர்கள் பின்தொடருவார்கள் என்பது கூட தெரியாதா?
தாய் மாமனாக இருப்பதற்கு முன் பெத்த குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியமில்லையா? என சரமாரியாக விமர்சித்தார்.

இந்த நிலையில் தவெகவில் இருந்து விலகிய ரஞ்னா, முதலமைச்சர் ஸ்டாலின் முன் திமுகவில் இணைந்தார். முன்னதாக பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக பணியாற்றி அவர், மும்மொழிக் கொள்கை, திராவிட பெறுப்பு, தமிழகம் புறக்கணிப்பு காரணங்களுக்கு அக்கட்சியில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்து.

