முதல்வரை சிறையில் அடைக்க வேண்டும்- கோவை கல்லூரி மாணவி விவகாரத்தில் பாமக காட்டம்

கோவை: முதல்வர் ஸ்டாலினை தான் சிறையில் அடைக்க வேண்டும் என்று பாமக திலகபாமா விமர்சித்துள்ளார்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் உரிய தண்டனை வாங்கி தர வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் திலகபாமா, மற்றும் பாமக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக பொருளாளர் திலகபாமா, தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது என்றார். தவறு நடந்தால் எனது கை இரும்பு கையாக செயல்படும் என்று முதல்வர் கூறுகிறார், ஆனால் தற்பொழுது அந்த கை எங்கே போனது என்று தெரியவில்லை என்ன விமர்சித்தார்.

தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம்,கடலூர்,கோவை போன்ற பகுதிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி வருவதாகவும் போதைப் பழக்கத்தினால் இதுபோல குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

Advertisement

தீபாவளிக்கு மது விற்பனை செய்வதற்கு தமிழக அரசு டார்கெட் வைத்துள்ளது. அதேபோல சட்ட ஒழுங்கை சீர் செய்ய டார்கெட் வைத்துள்ளார்களா? என கேள்வி எழுப்பினார். அந்த சம்பவம் நடந்த பகுதியில் மதுபான கடையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து விட்டனர் இதுவே பொதுமக்கள் செய்தால் மதுபான கடைக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றார்.

கரூர் சம்பவத்தில் சாரி கேட்டது போல அந்த பெண்ணை அழைத்து முதல்வர் சாரி கேட்பாரா?? குற்றவாளிகளை குடி நோயாளியாக மாற்றிய முதல்வர் ஸ்டாலினை தான் சிறையில் அடைக்க வேண்டும் என்று காட்டமாக விமர்சித்தார். அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது எனவும் இன்று காலை கூட பயணம் செய்து வந்த வழியில் காலை 6 மணிக்கே மது அருந்திவிட்டு சாலையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற அவர் இது காவல்துறைக்கு தெரியாமல் இருக்கிறதா முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு கட்டுப்பாட்டில் சட்ட ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறிய அவர் கேட்டால் பெரியார் மண் என்று கூறுகிறார்கள் ஆனால் பெண்கள் யாரும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என விமர்சனம் செய்தார். தமிழக அரசு அனைத்து பகுதிகளும் போதைப் பொருட்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கூறினார். தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் எண்ணிக்கை குறைப்பேன் என்று கூறினார்கள் ஆனால் தற்பொழுது வரை நிறைவேற்றவில்லை என்றார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.

சேலம் பாமக எம்எல்ஏ அருள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்விக்கு, பாக்கு காய வைத்த இடத்தில் எம்எல்ஏ அருள் வாகனத்தை நிறுத்தும் போது அங்கு நிறுத்த வேண்டாம் என்று கூறியதற்கு மாற்றுத்திறனாளி ஒருவரை அருள் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தாக்கி உள்ளனர் அதனை அங்க இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர் கேட்டதற்கு வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஆகிவிட்டது என்று தெரிவித்தார். அருள் ஏகப்பட்ட பொய்களை கூறி வருகிறார் இந்த பொய்கள் அடுத்து வந்து சிசிடிவி காட்சிகளில் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.கலவரத்தை உண்டாக்கிய எம்எல்ஏ அருள் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாமகவில் மோதல் போக்கு தொடர்ச்சியாக இருக்குமா என்ற கேள்விக்கு , இரு தரப்பினரிடமும் வன்முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அறவழியில் தான் பேச சொல்லி வலியுறுத்தி வருகிறோம்.எது சரியான நடவடிக்கையோ அதை ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

Recent News

கோவையில் கல்லூரி மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம்- RDO நேரில் விசாரணை

கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியுள்ளார். கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp