ஜனநாயகன் படம் மாற்றத்தை உருவாக்கும்- கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

கோவை: ஜனநாயகன் படம் மாற்றத்தை உருவாக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், விஜயால் இரண்டாவது இடத்தை பிடிக்க முடியாது வரலாற்றை மாற்ற முடியாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தெரிவித்தது குறித்தான கேள்விக்கு தமிழக வெற்றி கழகம் புதிய வரலாற்றை படைக்கக்கூடிய இயக்கமாகத்தான் எதிர்காலத்தில் அமையப் போகிறது என்றும் மக்களின் நிலை என்ன என்பதை களத்தில் தான் காண வேண்டும் என்றார்.

உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுது முதலிடம் விஜய், இரண்டாவது இடம் தான் பிரதமர், மூன்றாவது இடம் முன்னாள் ஆந்திரா முதலமைச்சர், நான்காவது இடம் இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று குறிப்பிடார். அடுத்த முதல்வர் விஜய் தான் என்பதை காலம் பதில் சொல்ல இருக்கிறது என்றும் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு மாதத்திற்கு முன்பு கூறும் பொழுது இவரே நூறாண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்தால் எங்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார், அப்படி என்றால் இருவரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்று பொருள் என்றார்.

திமுக ஆட்சி செய்கின்ற பொழுது எம்ஜிஆர் வெளியே வந்து அவர்தான் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றைப் படைத்தார் என்று குறிப்பிட்ட அவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் என சுட்டி காட்டினார். தலைவர் வருவார் முதல்வர் ஆவார் என்று தான் மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள் என்றார். தமிழக வெற்றி கழகம் ரசிகர் மன்றமாக தான் உள்ளது என்று காங்கிரஸ் எம்பி சிதம்பரம் கூறியது தொடர்பான கேள்வி- ஒவ்வொருவரும் ஒரு கருத்துக்களை சொல்கிறார்கள் அதற்கெல்லாம் பதில் சொல்வது சரியாக இருக்காது என்றார்.
நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களுக்குப் பிறகு இந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இரண்டு கட்சிகளும் வேண்டாம் புதிய முகம் தான் தேவை என்று தமிழக மக்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள் என்றார்.

திரைப்படத்தை வெளியிடும் பொழுது வளர்ந்து வரும் இயக்கங்களுக்கு தடைகள் ஏற்படும் என்றார். எத்தனை பேர் கட்சியில் இணைவார்கள் என்ற கேள்விக்கு பொங்கல் வரை பொறுத்திருங்கள் அதற்குள் எத்தனை பேர் வருகிறார்கள் என்று பாருங்கள் என்றார். டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்வார்கள் என்பது அல்ல நம் கூட்டணியில் இடம்பெறுவார் என தெரிவித்தார்.

மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஒரு வரலாற்றைப் படைத்துள்ளது என்றும் கூறினார். அங்கு பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் தான் சாலையில் ரோட் ஷோ நடத்தப்படும் பொதுவாக அங்கு டிராபிக் ஜாம் ஆகாது ஆனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஆன வரலாறும் அங்கே உள்ளது என்றார்

ஜாக்டோ ஜியோ கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்தான கேள்விக்கு அதில் அரசாணை எவ்வாறு இருக்கிறது என்று முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பிறகு தான் பதில் அளிக்க வேண்டும் மேலும் அது தேர்தல் அறிவிப்புதான் என்றார்.
தமிழக கட்சி கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறினார்.

ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் எழுச்சியாக இருந்தது அது ஒரு மாற்றத்தை உருவாக்கும் திரைப்படம் வெளியான பிறகு மக்களை வியக்கத்தக்க வகையில் அந்த படம் இருக்கும் என்றார்.

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp