கோவையில் அரசு பள்ளியில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது…

கோவை: கோவையில் அரசு பள்ளியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது.

கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் கேக் வெட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பள்ளி குழந்தைகள் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கிழக்கு பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 2 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி அருள்குமார், 2 வது வட்டம் ஆ செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 10 கிலோ எடையுள்ள மு க ஸ்டாலின் உருவம் பொறித்த கேக்க்கினை பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டினர். மேலும் பள்ளியில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கும் வழங்கினர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கைது…

கோவை: கோவையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வருவாய் துறையினர் கைது செய்யப்பட்டனர். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 8...

Video